விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
இந்த அட்டையை பயன்படுத்தி தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் வரை ஆள் ஒன்றுக்கு 50 ஆயிரம் வரை மருத்துவ சேவை சலுகைகள் பெறலாம், குடும்பத்திற்கு 2 லட்சம் வரை பயன்பெறலாம்
பதிவுசெய்யும்போது தனிநபரின் ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண் கொடுக்கவும்.
குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது மற்றும் உறவுமுறை குறிப்பிடவும்
இச்சலுகைகள் சிறப்பு மருத்துவம் மற்றும் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு பொருந்தாது.
குறிப்பு:
இந்த மருத்துவ பயனாளர் அட்டை பதிவு செய்ததிலிருந்து ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும்.
அட்டை தொலைந்துபோயின் ரூ 200 கொடுத்து மறு அட்டை பெற்றுக்கொள்ளவும் அட்டை காலாவதி ஆகியிருந்தால், ரூ 100 கொடுத்து மறு அட்டை புதுப்பித்துக்கொள்ளவும்.
சலுகைகள்:
உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவோருக்கு கீழ்கண்ட மருத்துவ சலுகைகள் அளிக்கப்படும்.
நோயாளிகளுக்கான பொது படுக்கை வசதி மற்றும் உணவு இலவசம்
100 க்கும் மேற்பட்ட ஆய்வக பரிசோதனைகள் மற்றும் அடிப்படை மருந்துகள் இலவசம்
100 க்கும் மேற்பட்ட பொது அறுவைசிகிச்சைகான கட்டணம் இலவசம் (மருந்து மற்றும் மருத்துவ உள்வைப்பு உபகரணங்கள் தவிர்த்து)
இச்சலுகைகள் தனியார் மற்றும் அரசு காப்பீடு மூலம் பயன்பெறும் நோயாளிகளுக்கு / நோய்க்கு பொருந்தாது
பிரசவத்திற்கு முற்றிலும் இலவசம்:
கருத்தரித்த முதல் மாதத்திலேயே பதிவு செய்து வழக்கமான பரிசோதனை செய்துவருபவர்களுக்கு SRM வள்ளியம்மை திட்டம் சார்பாக சன்மான தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு தகவல் மையைத்தை(Help Desk) அணுகவும்.
மருத்துவமனை வலைத்தளத்திற்கு செல்ல உள்ளீடு செய்க.
https://www.srmhospital.co.in/
Scan QR Code: